உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போக்சோ கைதி சிறையில் உயிரிழப்பு

போக்சோ கைதி சிறையில் உயிரிழப்பு

கோவை, ; கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைதி உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி, 67. கடந்த 2023ம் ஆண்டு ராசிபுரம் மகளிர் போலீசார் போச்சோ வழக்கில் கைது செய்தனர். நீதிமன்றத்தில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழக்கப்பட்டது. அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் சிறையில் இருந்த ராமசாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இது குறித்து சக சிறை வாசிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரை சிறை மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ