போத்தனுார் விநாயகர், மாரியம்மன் மாகாளியம்மன் கோவில் திருவிழா
போத்தனூர், ; கோவை, போத்தனூர் அடுத்து கோணவாய்க்கால்பாளையத்தில் உள்ள விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மன் கோவில் உற்சவ திருவிழா கடந்த, 6ம் தேதி சாட்டுதலுடன் துவங்கியது.7 முதல் 13 வரை, அம்மனுக்கு மஞ்சள் நீர் ஊற்றுதல், சிறப்பு பூஜை நடந்தன. 9ல் வீடுகளில் முளைப்பாலிகை இடுதல், 13ல் கணபதி வேள்வி, கம்பம் நடுதல், 14 முதல், 19 வரை கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றுதல், பூவோடு எடுத்து வருதல், பிரசாதம் வழங்குதல் நடந்தன.நேற்று மதியம் அலங்கார வழிபாடு, இரவு ஆபரணம் எடுத்து வருதல், சக்தி அழைக்க ஆற்றுக்கு செல்லுதல் நடந்தன. திரளானோர் பங்கேற்றனர்.இன்று காலை சக்தி அழைத்து வருதல், பொங்கல் வைத்தல், அம்மனுக்கு அபிஷேக பூஜை, மாலை மாவிளக்கு வழிபாடு நடக்கின்றன.நாளை காலை சிறப்பு பூஜை, மதியம் உச்சி பூஜை, மகேஸ்வர பூஜை மாலை முளைப்பாலிகை அழைத்து வருதல், அம்மன் திருவீதி உலா, இரவு கம்பம் கலைத்தல், அம்மன் ஆற்றில் விடுதல் நடக்கின்றன.23 காலை முதல் மாலை வரை, மஞ்சள் நீராடுதல், மறுபூஜை, அபிஷேக பூஜையுடன் விழா நிறைவடைகிறது.