உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிலை பொறுப்பாளர்களுக்கு போலீசார் அறிவுரை

சிலை பொறுப்பாளர்களுக்கு போலீசார் அறிவுரை

கோவை; விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகள் அமைப்பவர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. விநாயகர் சதுர்த்தி விழா வரும், 27ம் தேதி நடக்க உள்ளது. அன்றைய தினம் வீடுகளில் பல்வேறு விதமான விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும். இந்து அமைப்புகள் சார்பிலும், விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு, வழிபாடு நடத்தப்படும். கடந்தாண்டு, 712 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. கடந்தாண்டு அனுமதிக்கப்பட்ட இடங்களை விட, நடப்பாண்டு வேறு இடங்களில் சிலைகள் அமைக்க அனுமதி வழங்கப்படாது என, போலீசார் தெரிவித்துள்ளனர். இந்தாண்டு சிலைகள் வைக்க, 125 பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். கோவை மாநகர போலீஸ் உயர் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'சிலைகள் அமைக்கும் நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம், போலீஸ் ஸ்டேஷன் வாரியாக நடத்தப்பட்டுள்ளது. கடந்தாண்டுகளில் சிலை களை கரைக்க எடுத்துச் செல்லும் போது, பிரச்னைகள் ஏற்பட்டன. அதை தவிர்க்க, இந்தாண்டு சிலைகள் அமைக்கப்பட்டவுடன் காவல் இருக்க, தனியாக நபர்களை நியமிக்க வேண்டும். அவர்கள் குறித்த தகவல்களை, போலீசாரிடம் வழங்க வேண்டும். செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. சர்ச்சைக்குரிய வகையில் எதுவும் பேசக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை