உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருத்துவர்களுடன் வந்த போலீசார் விசைத்தறியாளர்கள் கடும் எதிர்ப்பு

மருத்துவர்களுடன் வந்த போலீசார் விசைத்தறியாளர்கள் கடும் எதிர்ப்பு

சோமனூர்: நள்ளிரவில் மருத்துவ குழுவினருடன் போலீசார் வந்ததால், உண்ணாவிரதம் இருந்த விசைத்தறியாளர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.கூலி உயர்வு கேட்டு, 30 நாட்களாக கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். இதில், 12 விசைத்தறியாளர்கள், 15ம் தேதி இரவு முதல் சோமனுாரில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, உண்ணாவிரதம் இருக்கும் விசைத்தறியாளர்களின் உடல் நிலையை பரிசோதிக்க, மருத்துவ குழுவினருடன் கருமத்தம்பட்டி போலீசார் வந்தனர்.உண்ணாவிரதம் இருப்போரை கைது செய்ய வந்துள்ளதாக, விசைத்தறியாளர்கள் மத்தியில் தகவல் பரவியது. ஏராளமான விசைத்தறியாளர்கள் உண்ணாவிரத பந்தலில் திரண்டு, போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை சமாதானப்படுத்திய போலீசார், மருத்துவர்கள் உண்ணாவிரதம் இருப்போரின் உடல்நிலையை பரிசோதித்தனர். இருவரின் உடல்நிலை மோசமாக இருப்பது தெரிந்தது, அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல போலீசார் முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த விசைத்தறியாளர்கள், தங்கள் வாகனங்களில், இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து, மீண்டும் உண்ணாவிரத பந்தலுக்கு அழைத்து வந்தனர். தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நேற்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை