மேலும் செய்திகள்
சாலை விபத்துகளில் கடந்தாண்டு 404 பேர் பலி
04-Feb-2025
கேரளா மாநிலம், கோவைக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக பொள்ளாச்சி நகரம் அமைந்துள்ளதால், வாகன போக்குவரத்து அதிகம் உள்ளது. அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் உள்ளது. இதனால், அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது தொடர்கதையாகியுள்ளது.பொள்ளாச்சி - பல்லடம் ரோடு, ராசக்காபாளையம் வளைவில் வாகனங்கள் வேகமாக வருவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. வாகனங்கள் கவிழ்வது போன்ற சம்பவங்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.உடுமலை ரோடு மிகவும் உருக்குலைந்துள்ளதால், விபத்துகள் ஏற்படுத்துகிறது. மேலும், பயன்படுத்தப்படாத வாகனங்களை நிறுத்துமிடமாக சர்வீஸ் ரோடு மாறியுள்ளது. இதனால் இந்த ரோட்டில் விபத்துகள் நடக்காத நாளில்லை.இதேபோன்று, செல்லப்பம்பாளையம் பிரிவு, தனியார் கல்லுாரி அருகே விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.சாலை விபத்துகளை தடுக்க, ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்களிலும் குழு அமைக்கப்பட்டன. அதில், ஒரு எஸ்.ஐ., அல்லது எஸ்.எஸ்.ஐ., நெடுஞ்சாலைத்துறை அதிகாரி, சம்பந்தப்பட்ட பகுதி கிராம நிர்வாக அலுவலர், பொறியியல் படிக்கும் மாணவர்கள், '108' ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. அந்தந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில், இக்குழுவினர், அதிக விபத்துகள் நடைபெறும் இடங்களை ஆய்வு செய்து வருகின்றனர். ரோட்டின் தரம், விபத்துக்கான காரணம், விபத்துகளை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.இக்குழு ஆய்வு செய்து வரும் சூழலில், விபத்துகள் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதற்கட்டமாக நெடுஞ்சாலைத்துறை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வாயிலாக வேகத்தடை அமைப்பு, ரோட்டில் மஞ்சள் பட்டை கோடுகள், மெதுவாக செல்ல வேண்டும் என்பதை குறிக்கும் வகையில், 'ஸ்லோ' என எழுதப்படுகிறது.மேலும், தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்துதல், வேகத்தை குறைத்து மெதுவாக செல்ல அறிவிப்பு பலகை வைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.அதிகாரிகள், போலீசார் கூறியதாவது:உடுமலை ரோட்டில், விபத்துகள் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. செல்லப்பம் பாளையம் பிரிவு, தனியார் கல்லுாரி, சின்னாம்பாளையம், மரப்பேட்டை சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில், விபத்துகளை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.மேலும், பல்லடம் ரோட்டில் ராசக்காபாளையம் சந்திப்பு, வளைவு மற்றும் தனியார் பள்ளி அருகே உள்ளிட்ட இடங்களில் வேகத்தடைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. மற்ற இடங்களிலும் ஆய்வு செய்து, பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். விபத்துகள் தடுக்க விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.இவ்வாறு, கூறினர்.
பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் விபத்துகளை தடுக்க தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள், மஞ்சள் பட்டை கோடுகள் வரைந்துள்ளது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் ரோட்டையும் முழுமையாக சீரமைக்க நடவடிக்கை எடுத்தால் பயனாக இருக்கும். குறைபாடுகளை சரி செய்து பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தால் பயனாக இருக்கும். மேலும், மஞ்சள் பட்டை கோடுகள் தடிமனாக அமைப்பதால், வாகனங்கள் தடதட வென அதிர்கின்றன.அதனால், தடிமனை குறைக்க வேண்டும், என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
04-Feb-2025