உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  குளித்தால் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை

 குளித்தால் நடவடிக்கை போலீசார் எச்சரிக்கை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி, நெல்லிதுறை, சிறுமுகை, வழியாக பவானி ஆறு செல்கிறது. பவானி ஆற்றில் பில்லூர் அணையில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. பில்லூர் அணை நீர் பிடிப்பு பகுதிகளிலும், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தால் பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும். மின் உற்பத்தி பயன்பாடிற்கு பிறகு பில்லூர் அணையில் இருந்து, பவானி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இச்சமயங்களில் ஆபத்து பகுதிகளில் குளிப்பவர்கள், நீரில் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. மேட்டுப்பாளையம் போலீசார் கூறுகையில், 'பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை விரைவில் விடப்பட உள்ளது. பள்ளி மாணவர்கள் பவானி ஆற்றில் குளிப்பதற்கு படையெடுப்பார்கள். பவானி ஆற்றில் குளிக்க தடைவிதிக்கப் பட்டுள்ளது. அத்துமீறி ஆற்றில் குளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுதவிர, பவானி ஆற்றின் ஆபத்தான பகுதிகளில், 'லைப் கார்ட்ஸ்' போலீஸ் பிரிவினர் 24 மணி நேரமும் ரோந்து செல்கின்றனர். மொத்தம் 19 இடங்கள் ஆபத்தான பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ளன' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ