உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மாணவிக்கு தொல்லை: போலீஸ்காரர் கைது

 மாணவிக்கு தொல்லை: போலீஸ்காரர் கைது

ஈச்சனாரி: கல்லுாரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் மணிவேந்தன், 31, கைது செய்யப்பட்டார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 19 வயது மாணவி, ஈச்சனாரி தனியார் கல்லுாரியில் இரண்டாமாண்டு படிக்கிறார். நேற்று காலை கல்லுாரிக்கு வர, தனியார் பஸ்சில் ஏறினார். அப்போது போலீஸ்காரர் ஒருவர், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து, தன் தோழியரிடமும், போக்குவரத்து போலீஸ் எஸ்.ஐ., ரியாஸ்கானிடமும் மாணவி கூறியுள்ளார். விசாரணையில், போத்தனுார் போலீஸ் ஸ்டேஷனில் புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக பணிபுரியும், உடுமலையை சேர்ந்த மணிவேந்தன் என தெரிந்தது. இதையடுத்து, பேரூர் சரக மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் மாணவி அளித்த புகாரில் வழக்கு பதிந்த போலீசார், மணிவேந்தனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ram pollachi
ஆக 06, 2026 16:59

தனியார் பேருந்துகள் எல்லாம் காதல் வாகனம் இதில் ரதி மன்மதன் மாதிரி ஒரே விளையாட்டு நடக்கும்... எதிரில் யார் இருக்கிறார்கள் என்ற கவலை இவர்களுக்கு இல்லை.... அரசு பஸ் காலியாக போகும் ஒரு பயலும் ஏற மாட்டார்கள் தனியார் பஸ்சில் நின்று கொண்டு முட்டி மோதிக் கொண்டு செல்வது சுகமாக இருக்கும் பலருக்கும்.


புதிய வீடியோ