உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகன சோதனையில் கார் மோதி போலீஸ்காரர் காயம்

வாகன சோதனையில் கார் மோதி போலீஸ்காரர் காயம்

கோவை; கோவை, ரத்தினபுரி கண்ணப்பன் நகரை சேர்ந்தவர் பிரவீன், 26; ஆர்.எஸ்.புரம் போலீஸ் ஸ்டேஷன் போக்குவரத்து பிரிவில் கான்ஸ்டபிள். நேற்று எஸ்.எஸ்.ஐ., பிரசாந்த் மற்றும் சில போலீசாருடன், பிரவீன் தொண்டாமுத்தூர் வடவள்ளி ரோட்டில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அவ் வழியாக வந்த காரை, தடுத்து நிறுத்த முயன்றார். காரை ஓட்டி வந்த நபர் நிறுத்தாமல், பிரவீன் மீது மோதி விட்டு வேகமாக சென்றார். காலில் காயமடைந்த பிரவீன், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.வடவள்ளி போலீசார் போலீசார் வழக்குப்பதிந்து, காரின் பதிவெண்ணை வைத்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை