உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விசைத்தறிகள் வேலை நிறுத்தம் பல ஆயிரம் பேர் வேலை இழப்பு

விசைத்தறிகள் வேலை நிறுத்தம் பல ஆயிரம் பேர் வேலை இழப்பு

அன்னுார், ; அன்னுார் தாலுகாவில், விசைத்தறிகள் வேலை நிறுத்தத்தால், பல ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.அன்னுார் தாலுகாவில், அன்னுார், குமாரபாளையம், சொக்கம்பாளையம், கணேசபுரம், பொன்னே கவுண்டன்புதூர், கோவில்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், 5,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் உள்ளன.இதில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் பேர் பணிபுரிந்து வந்தனர். கூலி உயர்வு கோரி, கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூட்டமைப்பு கடந்த மார்ச் 19ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தை அறிவித்தது.இதையடுத்து, 29வது நாளாக, அன்னுார் தாலுகாவில் நேற்றும் விசைத்தறிகள் செயல்படவில்லை. கட்டபொம்மன் நகர் விசைத்தறி உரிமையாளர்கள் கூறுகையில், 'ஒவ்வொரு தறிக்கூடத்திலும் எட்டு முதல் 16 பேர் பணிபுரிந்து வந்தனர். 20, 30, 40ம் எண் காடா துணிகளை உற்பத்தி செய்து வந்தோம். வேலை நிறுத்தத்தால் கடந்த 29 நாட்களாக பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவிக்கின்றனர். வயது குறைவாக உள்ள தொழிலாளர்கள் கட்டட வேலைக்கு செல்கின்றனர். மற்றவர்கள் உரிய வேலை கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். அன்னூர் பகுதியில் உள்ள விசைத்தறிகளில், திருப்பூர், சோமனுார் பகுதியில் இருந்து பாவு, நூல் வாங்கி காடா துணி நெசவு செய்து கொடுத்து வருகிறோம். தற்போது, மின் கட்டண உயர்வு, வங்கி வட்டி உயர்வு, தொழிலாளர் சம்பளம் அதிகரிப்பு, உதிரிபாகங்கள் விலை உயர்வு ஆகியவற்றால் கடும் நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளோம்.எனவே, நெசவு கூலியை உயர்த்தி தர வேண்டும். மின் கட்டணத்தையும் வங்கி கடன் வட்டியையும் குறைக்க வேண்டும். அப்போதுதான் விசைத்தறிகள் மீண்டும் இயங்க முடியும்.நெசவுத் தொழிலை மீட்க மத்திய மாநில அரசுகள் முன் வர வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !