விசைத்தறி உரிமையாளர்கள் கூட்டமைப்பு கூட்டம்
சோமனுார்; கோவை திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூட்டம் சோமனுாரில் நடந்தது. சோமனுார் சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.அவிநாசி சங்க தலைவர் முத்துசாமி, தெக்கலுார் தலைவர் பொன்னுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். கூலி உயர்வு பிரச்னையில் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப்பட்டன.கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் கருப்பு கொடி கட்டும் போராட்டம் நடத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால், வரும், 23ம் தேதிக்குள் அந்தந்த பகுதியில் பொதுக்குழு கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க உள்ளோம். வரும், 23ம்தேதி புதிய போராட்டத்தை அறிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.