செய்முறைத் தேர்வு பணி ஆசிரியர்கள் கோரிக்கை
கோவை: மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வை 35,711 மாணவர்களும், பத்தாம் வகுப்பு தேர்வை 37,883 மாணவர்களும் எழுத உள்ளனர். செய்முறைத் தேர்வுகள் பிப்ரவரியில் தொடங்குகின்றன. பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் பிப். 9-ம் தேதி தொடங்கி 14-ம் தேதி வரையும், பிளஸ் 1 மாணவர்களுக்கு பிப். 15-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரையும், பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் பிப். 23-ம் தேதி தொடங்கி 28-ம் தேதியும் முடிகின்றன. தேர்வு பணிகளை வட்டாரத்திற்குள் ஒதுக்க ஆசிரியர்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.