மேலும் செய்திகள்
பார்வதி ஆயில் மில்லில் தரமான எண்ணெய் விற்பனை
02-Oct-2025
கோவை: கடந்த சில மாதங்களாகவே, தேங்காய் எண்ணெய் மற்றும் சீரக சம்பா அரிசி விலை, படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இதில் சீரக சம்பா அரிசியின் விலை குறைந்துள்ளதாக, மாவட்ட மளிகை பொருட்கள் வியாபாரிகள் சங்கத் தலைவர் பிரபாகர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: தேங்காய் எண்ணெய் ஒரு லிட்டர் 480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. துவரம்பருப்பு 115 ரூபாயாக இருந்தது; தற்போது 125 ரூபாயாக உள்ளது. பிற பொருட்களில் பெரிய மாற்றங்கள் ஏதும் இல்லை. நல்லெண்ணெய் மாற்றங்கள் இன்றி 400 ரூபாய்க்கும், கடலை எண்ணெய் 220 ரூபாய்க்கும் கிடைக்கிறது. மேற்கு வங்கத்தில் அதிக மழை காரணமாக, சீரக சம்பா அரிசி 220 ரூபாய்க்கு கடந்த சில மாதங்களாக அதிகரித்து, விற்பனை செய்யப்பட்டது; தற்போது, விலை குறைந்து 160 ரூபாயாகவுள்ளது. இரண்டு மாதங்களில் புதிய வரத்து வரும் என்பதால், மேலும் விலை குறைந்து, பழைய விலைக்கு விற்பனையாகும். இவ்வாறு, அவர் கூறினார்.
02-Oct-2025