உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பாலியல் துன்புறுத்தல் தொழிலாளிக்கு சிறை

 பாலியல் துன்புறுத்தல் தொழிலாளிக்கு சிறை

கோவை: கோவை கிழக்கு பகுதி நேருஜி நகரை சேர்ந்தவர் பன்னாரி,55; கூலி தொழிலாளி. 2024ல், பக்கத்து வீட்டில் தனியாக துாங்கி கொண்டிருந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தார். புகாரின் பேரில், கிழக்கு பகுதி அனைத்து மகளிர் விசாரித்து, பன்னாரியை கைது செய்தனர். அவர் மீது, கோவை முதன்மை போக்சோ கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்தது. நீதிபதி பகவதியம்மாள், குற்றம்சாட்டப்பட்ட பன்னா ரிக்கு, ஐந்தாண்டு சிறை, 11,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை