சிறை கைதி உயிரிழப்பு
கோவை; கோவை மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்தவர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம், குமாரலிங்கம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில், கிருஷ்ணன், 69 என்பவர் கைது செய்யப்பட்டு விசாரணை கைதியாக, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன், சிறையில் இருந்த இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சிறை போலீசார், கோவை அரசு மருத்துவமனையில் உள்ள சிறை கைதிகளுக்கான வார்டில், கிருஷ்ணனை அனுமதித்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.