உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தினமலர் பட்டம் வினாடி-வினா போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற தனியார் பள்ளிகள்

 தினமலர் பட்டம் வினாடி-வினா போட்டியில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற தனியார் பள்ளிகள்

கோவை டிச. 24-: 'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் எஸ்.என்.எஸ்., கல்விக் குழுமம் இணைந்து நடத்திய, 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி-வினா போட்டியில், பங்கேற்ற மாணவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். இப்போட்டிக்கு, சத்யா ஏஜென்சிஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் லேண்ட் ஆகியவை, கிப்ட் ஸ்பான்சர்களாக இணைந்துள்ளன. சி.எஸ்.அகாடமி இன்டர்நேஷனல்: கோவைப்புதூரில் உள்ள இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றில் 63 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிசுற்றில் பங்கேற்றனர். 'எப்' அணியின் விஸ்வாஸ், சாத்விக் ராம் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். முதல்வர் சோனி தாமஸ், இறுதி போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, பரிசுகளை வழங்கினார். சி.எஸ்.அகாடமி (திருச்சி ரோடு கேம்பஸ்): ராமநாதபுரத்தில் உள்ள இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றில் 107 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிசுற்றில் பங்கேற்றனர். 'சி' அணியின் ரிஷா, யது நந்தன் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். முதல்வர் சாந்த பிரியா, இறுதி போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, பரிசுகளை வழங்கினார். விஜய வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளி: ஒண்டிப்புதூரில் உள்ள இப்பள்ளியில் நடந்த தகுதி சுற்றில் 50 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 16 பேர் எட்டு அணிகளாக பிரிந்து, பள்ளி அளவிலான இறுதிசுற்றில் பங்கேற்றனர். 'பி' அணியின் பிரதர்ஷன், லதுன் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். முதல்வர் ஆனந்தி பெலிசிட்டா, இறுதி போட்டியில் பங்கேற்ற மாணவர்களுக்கு, பரிசுகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ