தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்: 29ல் கைமேல் அப்பாயின்ட்மென்ட் ஆர்டர்
கோவை: கோவையில் வரும் 29ம் தேதி, தனியார் துறை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில் பங்கேற்று பயன்பெற அழைப்பு விடப்பட்டுள்ளது. கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில், மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம், வரும் 29ம் தேதி காலை 8:00 மணி முதல், கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவை, மேட்டுப்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து, 250க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு, தொழில் கல்வி பயின்றனர்கள், செவிலியர்கள், பொறியியல் பட்டதாரிகள் என, அனைத்து பிரிவினரும் முகாமில் பங்கேற்கலாம். வயது வரம்பு இல்லை; அனுமதி இலவசம்.தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு, பணிநியமன ஆணை உடனுக்குடன் வழங்கப்படும். இவர்களின் வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. வேலை நாடும் மனுதாரர்கள், www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் candidate login ல் விபரங்களை பதிவு செய்ய வேண்டும். விபரங்களுக்கு, மனுதாரர்கள், 0422 2642388, 94990 55937 என்ற எண்ணில், காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை தொடர்பு கொள்ளவும்.கலந்து கொள்ள விரும்பும் தனியார் நிறுவனங்கள், www.tnprivatejobs.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து, அதன் வாயிலாக, வேலை வாய்ப்பு முகாமுக்கு விண்ணப்பிக்க வேண்டும். விபரங்களுக்கு, வேலை வாய்ப்பளிப்போர், 80563 58107 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என, மாவட்ட கலெக்டர் பவன்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.