மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை
17-Aug-2025
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி அருகே, சமத்தூர் வாணவராயர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1998 - -1999 கல்வி ஆண்டில் படித்த முன்னாள் மாணவ, மாணவியர் அமைப்பான, 'ஸ்டார் அசோசியேஷன்' சார்பாக, பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளியில், கடந்த 2024--25ம் கல்வி ஆண்டில் தேர்வு எழுதி வெற்றி பெற்ற பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண்கள் பெற்ற ஆறு மாணவர்களுக்கு, முதல் பரிசாக மூவாயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக இரண்டாயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 1,500 ரூபாய் பரிசுத்தொகை மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
17-Aug-2025