செயல்முறை மருத்துவ விழிப்புணர்வு பேரணி
கோவை : உலக செயல்முறை மருத்துவ தினத்தை முன்னிட்டு, கே.எம்.சி.ஹெச்., செயல்முறை மருத்துவக்கல்லுாரி மற்றும் மருத்துவமனை செயல்முறை மருத்துவத்துறை சார்பில், விழிப்புணர்வு பேரணி, ரேஸ்கோர்ஸ் சாலையில் நடந்தது.பேரணியை, கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் டாக்டர் நிர்மலா கொடியசைத்து துவக்கிவைத்தார். 'அனைவருக்கும் செயல்முறை மருத்துவம்' என்ற கருப்பொருளில், பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சாலையோர நாடகத்தில் மாணவர்கள் பங்கேற்று, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.இதில், என்.ஜி.பி.,ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் தவமணி பழனிசாமி, கே.எம்.சி.ஹெச் நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண், செயல்முறை மருத்துவக் கல்லுாரியின் முதல்வர் பிரவீன், கல்லுாரி இயக்குனர் டாக்டர் சுஜாதா மிஸ்சல் மற்றும் சக ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட, 350 பேர் பங்கேற்றனர்.