உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஊராட்சியை மாநகராட்சியாக மாற்ற எதிர்ப்பு; மலுமிச்சம்பட்டியில் மக்கள் கடையடைப்பு

ஊராட்சியை மாநகராட்சியாக மாற்ற எதிர்ப்பு; மலுமிச்சம்பட்டியில் மக்கள் கடையடைப்பு

போத்தனூர்; கோவை, கிணத்துக்கடவு சட்டசபை தொகுதிக்குட்பட்டது, மலுமிச்சம்பட்டி கிராம ஊராட்சி சுமார் ஐந்து கி.மீ., பரப்பளவு கொண்ட இங்கு, 12 வார்டுகள் உள்ளன. 300க்கும் மேற்பட்ட பலவித கடைகள், ஐந்து அரசு உள்பட 10 பள்ளிகள், இரு கல்லூரிகள், 25க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தினமும், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.இதன் ஆண்டு வருமானம், ரூ.2 - 2.5 கோடி. இந்த ஊராட்சியை, கோவை மாநகராட்சியுடன் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் நேற்று ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. பஞ்., முன்னாள் துணை தலைவர் சதீஷ்குமார் கூறுகையில், ''இதுவரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளிலேயே, அடிப்படை வசதிகள் முழுமையாக செய்து முடிக்கப்படவில்லை. இச்சூழலில் இப்பகுதியை இணைப்பது, அரசுக்கு வருவாய் கிடைக்கும் என்ற நோக்கில் தான். மக்களுக்கு வரி உயர்ந்து பாதிக்கப்படுவர். கடந்த ஆறு மாதங்களாக எந்த பணியும் மேற்கொள்ளப்படாததால், சுமார் ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் வங்கியில் உள்ளது. இதனை எடுத்து, பிற பகுதிகளுக்கு செலவிட திட்டமிடுவர். இங்கு வசிப்போருக்கு எந்த பயனும் கிடையாது. இணைப்பு கண்டித்து, தொடர் போராட்டங்கள் நடக்கும். வெள்ளிக்கிழமை (நாளை) கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Benu Mariantony
ஜன 09, 2025 11:07

மலுமிச்சம்பட்டி தவிர மத்த ஊருல அத்திக்கடவு தண்ணி வாரம் ஒரு முறை வருது. போய் சீரபாளையம் பஞ்சயத்த பாருங்க. ஏன் தண்ணி இங்கே வரல? நாங்க கட்டுற தண்ணி வரி எல்லாம் எங்கே போகுது? கால்வாய் சுத்தம் செய்ய படுதா? குப்பை தினமும் அள்ளப்படுதா? பொது குப்பை தொட்டி உள்ளதா? ஏதோ இப்போ எல்லாம் சரியா இருக்க மாரி ஒரு போராட்டம். இந்த போராட்டம் யாரோட ஆதாயத்துகாக? உண்மய சொல்லுங்க, மக்களோட நன்மைக்காகவா?


GoK
ஜன 09, 2025 10:32

சின்ன ஊர்க்கார திருடர்களே பெரிய வெளியூர்க்கார திருடர்களை விட பரவாயில்லை என்று நினைக்கிறார்கள் போல இருக்கிறது


முக்கிய வீடியோ