உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  குறைகளை தீர்க்காமலே முடித்து வைக்க எதிர்ப்பு

 குறைகளை தீர்க்காமலே முடித்து வைக்க எதிர்ப்பு

கோவை: ஆண்டுக்கு 2 முறை மாநகராட்சி சொத்து வரி வசூலிக்கிறது. வடவள்ளி சுப்பண்ணன், 75, என்பவருக்கு 2018-19ல் இருந்தே, ஒவ்வொரு அரையாண்டுக்கும் 2 முறை வரி விதிக்கப்படுகிறது. அதாவது, ஆண்டுக்கு 4 முறை சொத்து வரி செலுத்த சொல்லி, ஆன்லைனில் பதிவாகிறது. நேரிலும் ஆன்லைனிலும் பலமுறை புகார் கொடுத்தார். ஒவ்வொரு முறையும் ”தீர்வு காணப்பட்டது” என குறிப்பிட்டு ஆன்லைன் புகார்கள் முடித்து வைக்கப்பட்டன. கன்ஸ்யூமர் காஸ் அமைப்பு மூலமாக நகராட்சிகள் நிர்வாக இயக்குனரின் கவனத்துக்கு கொண்டு சென்றும் பலன் இல்லை. அமைப்பின் செயலர் கதிர்மதியோன் அரசுக்கு எழுதிய கடிதத்தில், 'பொதுமக்களின் குறைகளை தீர்க்காமலே முடித்து விட்டதாக ஆன்லைனில் பதிவேற்றுகின்றனர். இந்த தவறு தொடராமல் தடுக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ