உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காலி பணியிடங்களை நிரப்பக்கோரி தர்ணா

காலி பணியிடங்களை நிரப்பக்கோரி தர்ணா

கோவை: தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தமிழகம் முழுவதும் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தர்ணா போராட்டம், ரேஸ்கோர்ஸில் நேற்று நடந்தது. இந்த போராட்டத்திற்கு, மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார். இந்த போராட்டத்தில், தமிழகத்தில், சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்கள் 100 சதவீதம் காலியாக உள்ளது. பொது சுகாதாரம் இயக்குனர், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள, 1,002 சுகாதார ஆய்வாளர் நிலை 1 மற்றும் 2,715 சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்களுக்கு கூடுதல் ஒப்பளிப்பு வழங்கப்படும். போர்க்கால அடிப்படையில், தமிழக அரசு காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்களை அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி, சுகாதார ஆய்வாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதில், 130க்கும் மேற்பட்ட சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ