சட்டதிருத்தம் திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
கோவை: அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களை, தனியார் கல்வி நிறுவனங்களாக மாற்றும் தமிழக அரசின் சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் மற்றும் பல்கலை ஆசிரியர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. கோவை செஞ்சிலுவை சங்கம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 75 ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமிக்க பொது நிதியால் வளர்ந்த கல்வி நிறுவனங்கள், தனியாரிடம் ஒப்படைக்கும் அரசின் முடிவு, சமூக நீதிக்கு எதிரானது. கல்வி கட்டணம் பல மடங்கு உயரும். இடஒதுக்கீட்டு கொள்கை தகர்க்கப்படும். அரசு, அ ரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் மயமாகும் அபாயம் ஏற்படும் என்பதால் சட்டதிருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு, மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். பல் கலை ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் பிச்சாண்டி, துணைத் தலை வர் செந்தில் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற் றனர்.