உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பட்டியல் பிரிவிலிருந்து விடுவிக்க ஆர்ப்பாட்டம்

 பட்டியல் பிரிவிலிருந்து விடுவிக்க ஆர்ப்பாட்டம்

கோவை: தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி., பட்டியலில் இருந்து விடுவிக்க வலியுறுத்தி, கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தேவேந்திர இலக்கிய மன்றம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மன்ற நிறுவனர் பழனிசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், 'தேவேந்திர குல வேளாளர்களாகிய எங்களின் விருப்பம் இல்லாமலேயே 1936ம் ஆண்டு, எஸ்.சி., பட்டியலில் சேர்த்துவிட்டனர். தீண்டாமைக்கு ஆட்படாத தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி., பட்டியலில் இருந்து விடுவிக்க வேண்டும். எஸ்.சி., இட ஒதுக்கீடான 18 சதவீதத்தில் இருந்து உத்தேசமாக 6 சதவீத இட ஒதுக்கீட்டை எடுத்து, எம்.பி.சி., பட்டியலில் சேர்த்து, அதில் தேவேந்திர குல வேளாளர் சமூகத்துக்கு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும். தேசிய அளவில் ஓ.பி.சி.,யில் இணைக்க வேண்டும்' என வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ