பி.எஸ்.ஜி ., மருத்துவ கல்லுாரி 32வது பட்டமளிப்பு விழா
கோவை : பி.எஸ்.ஜி., மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின், 32வது பட்டமளிப்பு விழா கல்லுாரி அரங்கில் நடந்தது. பி.எஸ்.ஜி கல்விக்குழும நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். ஜெயதேவா இதய அறுவை சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர் மஞ்சுநாத், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அவர் கூறுகையில், ''நோயாளிகளின் நோய் சார்ந்த முழுமையான தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டியது கட்டாயம். தொடர்பாற்றல், ஆவணங்கள் பதிவு, தொழில் நெறிமுறை மருத்துவர்களுக்கு முக்கியமான தேவை. நோயாளிக்கு சிகிச்சை அளிப்பது மட்டுமின்றி, அவர்களின் பொருளாதார பிண்ணணியையும் கருத்தில் கொள்ளவேண்டியது அவசியம்,'' என்றார். பட்டமளிப்பு விழாவில், 155 எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் பட்டச்சான்றிதழ்களை பெற்றனர். 20 பேருக்கு தங்க பதக்கம், 15 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. கல்லுாரி முதல்வர் சுப்பாராவ், சக பேராசிரியர்கள், பெற்றோர் பலர் பங்கேற்றனர்.