மேலும் செய்திகள்
ரோட்டின் வளைவு பகுதி சேதமடைந்ததால் அதிருப்தி
03-Oct-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, முத்துக்கவுண்டனூர் அரசு பள்ளிக்கு செல்லும் ரோடு சேதமடைந்திருப்பதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கிணத்துக்கடவு, சொக்கனூர் ஊராட்சி முத்துகவுண்டனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் முத்துமலை முருகன் கோவிலுக்கு செல்லும் ரோட்டில் வாகன போக்குவரத்து அதிகமுள்ளது. இந்த ரோட்டில் அவ்வப்போது கனரக டிப்பர் லாரிகள் சென்று வருவதால், ரோடு ஆங்காங்கே சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால், அவ்வழியில் செல்லும் பள்ளி மாணவர்கள் முதல் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், விவசாயிகள் என பலர் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, மழை காலங்களில் இந்த ரோட்டில் சேறும் சகதியுமாக இருப்பதால் இருசக்கர வாகனங்கள் சென்றுவர பெரும் சிரமம் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் நிலை தடுமாறி சிலர் கீழே விழுகின்றனர். விசேஷ காலங்களில், முருகர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதயாத்திரை செல்லும் நாட்களிலும், விவசாயிகள் விளை பொருட்களை எடுத்து செல்லும்போதும் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர். எனவே, இப்பகுதி அனைத்து தரப்பினர் நலன் கருதி இந்த ரோட்டை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுத்தியுள்ளனர்.
03-Oct-2025