கொசு தொல்லையால் பொதுமக்கள் அதிருப்தி
வால்பாறை: வால்பாறை நகரில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இது தவிர, சுற்றுலா பயணியர் தங்கும் விடுதிகளும் அதிகளவில் உள்ளன. இந்நிலையில் வால்பாறையை குளிர்விக்கும் வகையில் இடையிடையே கோடை மழையும் பெய்கிறது. வால்பாறையில் மாறி வரும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் கடந்த சில நாட்களாக கொசு தொல்லையும் அதிக அளவில் காணப்படுகிறது. மக்கள் கூறுகையில், வால்பாறையில் பல்வேறு இடங்களில், சாக்கடை கால்வாய் சுத்தம் செய்யாததால், கொசுத்தொல்லை அதிகரித்து வருகிறது. இதனால் மக்களுக்கு வைரஸ், டெங்கு காய்ச்சல் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக கொசு ஒழிப்பு மருந்து தெளிக்க நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.