மேலும் செய்திகள்
திருப்பாசேத்தியில் குடிநீர் குழாயில் உடைப்பு
13-Dec-2025
பொள்ளாச்சி: சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில், குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது. பொள்ளாச்சி அடுத்த சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அம்பராம்பாளையம் நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீர் எடுத்து வரப்படுகிறது. குறிப்பாக, மோதிராபுரம் சுத்திகரிப்பு நிலையத்தில் முறையாக தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு, பிராதான குழாய் வாயிலாக பேரூராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள, 4 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; பிரஸ் காலனியில் உள்ள 2.25 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; அருள்ஜோதிநகரில் உள்ள 2 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி நிரப்பப்படுகிறது. தற்போது, மோதிராபுரத்தில் இருந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும், பி.வி.சி. குழாய் மாற்றியமைக்கப்பட்டு, துருப்பிடிக்காத வார்ப்பு இரும்பு அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பேரூராட்சி அலுவலகத்திற்கு செல்லும் வழித்தடத்தில் ஏற்பட்ட குழாய் உடைப்பு காரணமாக, தினமும் தண்ணீர் வீணாகி வருகிறது. ஏற்கனவே, அடிக்கடி உடைப்பு, கசிவு காரணமாக, குடியிருப்புகளுக்கு அதிக நாள் இடைவெளியில் குடிநீர் வினியோகிக்கப்படும் நிலையில், வீணாகும் தண்ணீரால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். மக்கள் கூறுகையில், 'குடிநீர் வினியோகத்தில் நிலவும் பிரச்னையை தீர்க்க நடவ டிக்கை எடுக்கப்படுகிறது. அதேநேரம், குழாய் உடைப்பு காரணமாக தண்ணீர் வீணாவது கண்டறியப்பட்டால் அதனை விரைந்து சீரமைக்க வேண்டும்,' என்றனர்.
13-Dec-2025