உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கழிப்பிட வசதி கோரி பொதுமக்கள் மறியல் 

கழிப்பிட வசதி கோரி பொதுமக்கள் மறியல் 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, கழிப்பிட வசதி ஏற்படுத்த கோரி, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். பொள்ளாச்சி அருகே, கோட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட, 14வது வார்டு பகுதி மக்கள், நேற்று கோட்டூர் - ஆழியாறு ரோட்டில், மதுரை வீரன் கோவில் அருகே மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்கள் கூறியதாவது: கோட்டூர், 14வது வார்டில் இருந்த பொதுக்கழிப்பிடம் பராமரிப்பின்றி இருந்தது. புதிதாக கழிப்பிடம் கட்டித்தருவதாக கூறி பழைய கழிப்பிடத்தை பேரூராட்சி நிர்வாகம் இடித்தது. ஆனால், இதுவரை கழிப்பிடம் கட்டித்தரவில்லை. இதையடுத்து, 15வது வார்டில் இருந்த பொதுக்கழிப்பிடத்தை அதிகாரிகள் அறிவுரைப்படி பயன்படுத்தினோம். தற்போது, அங்கு செப்டிக்டேங்க் சுத்தம் செய்யாததால் நிரம்பியது. அந்த கழிப்பிடத்துக்கும் பூட்டு போடப்பட்டது. கழிப்பிட வசதி இல்லாததால் மிகுந்த சிரமமாக உள்ளது. உடனடியாக கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, கூறினர். இதையடுத்து, போலீசார், மக்களிடம் சமரச பேச்சு நடத்தினர். 'நிரந்தர தீர்வு கிடைக்காவிட்டால், பேரூராட்சியை முற்றுகையிடுவோம்,' என்ற நிபந்தனையுடன் மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ