மேலும் செய்திகள்
மாதா கோவில் தேர்பவனி
26-May-2025
கோவை; புலியகுளம் அந்தோணியார் ஆலய தேர்பவனி திருவிழா, கோலாகலமாக நேற்று நடந்தது. புனித அந்தோணியார் ஆலய தேர் பவனி கொடியேற்றம், கடந்த 8ம் தேதி கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப்ஸ்தனிஸ் ஆலய கொடியேற்றினார். ஆலய பங்குதந்தை அருண் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலி, கூட்டுத்திருப்பலி, நற்கருணை ஆசீர் நிகழ்ச்சி நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான, ஆலய தேர்பவனி நேற்று நடந்தது. காலை 8:00 மணிக்கு, முதல் நற்கருணை மற்றும் உறுதிப்பூசுதல், ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடந்தது.நேற்று மாலை 6:00 மணிக்கு, கோவை மறை மாவட்ட பிஷப் தாமஸ் அக்வினாஸ், காட்டூர் பங்குதந்தை ததேயூஸ் அமல் தாஸ் தலைமையில், திருப்பலி நடந்தது. திருப்பலி முடிந்ததும் தேர்பவனி நடந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். பின்னர் இரவு 10:00 மணிக்கு, நற்கருணை ஆசீர் நடந்தது.
26-May-2025