காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமை வழிபாடு வருகிற, 20ம் தேதி நடக்கிறது. 23ம் தேதி நவராத்திரி உற்சவம் விழாவும் துவங்க உள்ளது. 27ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை, அக். 4ம் தேதி மூன்றாவது சனிக்கிழமை, 11ம் தேதி நான்காம் சனிக்கிழமை, 18ம் தேதி ஐந்தாம் சனிக்கிழமை வழிபாடு நடைபெற உள்ளது. காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமைகளில் நூற்றுக்கணக்கான தாசர்கள், கோவில் முன்பு அமர்ந்திருப்பர். பக்தர்கள் தாங்கள் கொண்டு வரும் அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை தாசர்களுக்கு படைத்து வழிபடுவர். பின்பு தாசர்கள் வழங்கும் அரிசி, பருப்பு, காய்கறிகளை வாங்கிச் சென்று, வீட்டில் பொங்கல் வைத்து விரதத்தை முடிப்பர்.