மேலும் செய்திகள்
கால்நடைகளுக்கு தடுப்பூசி முகாம்
27-Sep-2025
பொள்ளாச்சி: வெறிநோய் (ரேபிஸ்) ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சியில், 100 பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், செப்., 28ம் தேதி உலக ரேபிஸ் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதையொட்டி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி களும் நடத்தப்படு கின்றன. பொள்ளாச்சியில், கால்நடைத்துறை அந்தந்த கால்நடை மருந்தகம் வாயிலாக, இலவச தடுப்பூசி முகாம் நடத்தியது. அதன்படி, மாக்கினாம்பட்டி கால்நடை மருந்தகத்தில் கால்நடை உதவி இயக்குனர் சக்ளாபாபு தலைமையில், கால்நடை டாக்டர் கார்த்திக், உதவியாளர் பரிமளவள்ளி ஆகியோர், நாய்கள், பூனைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதேபோல, சிங்காநல்லுாரில் டாக்டர் கிருஷ்ணவேனி, செல்லப்பிரணாணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தினார். நுாற்றுக்கும் மேற்பட்ட பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. வடசித்துாரில், நடந்த முகாமில் டாக்டர் கிேஷார் கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினார். * பொள்ளாச்சி வருவாய் கோட்டத்தில், ஒவ்வொரு பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளிலும், சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு கால்நடைத்துறை வாயிலாக, ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அந்தந்த பகுதி கால்நடை டாக்டர் தலைமையிலான குழுவினர், இதற்கான பணியை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, மூன்று வார்டுகளுக்கு ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்குள்ள தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடப்படுகிறது. சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி மோதிராபுரத்தில் ரேபிஸ் தடுப்பூசி முகாம் நடந்தது. கால்நடை உதவி இயக்குனர் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல்அலுவலர் பூபதி முன்னிலை வகித்தார். 50 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர்.
27-Sep-2025