உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்வே ஆலோசனை குழு கண்காணிப்பாளரிடம் ம னு

ரயில்வே ஆலோசனை குழு கண்காணிப்பாளரிடம் ம னு

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷன் ஆலோசனை குழு சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டேஷன் கண்காணிப்பாளர் ரவீந்திர நாராய குப்தாவிடம் மனு கொடுக்கப்பட்டது.மனுவில் கூறியிருப்பதாவது: கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதிகளில் நடக்கும் சமூக விரோத செயல்களையும், குப்பை கொட்டுவதையும் தடுக்க வேண்டும். மக்கள் நலன் கருதி ரயில்வே ஸ்டேஷன் ரோட்டின் ஓரத்தில் உள்ள புதர்களை அகற்றம் செய்து, ரோட்டை விரிவுபடுத்த வேண்டும்.ரயில்வே ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியை முழுவதும் பாதுகாக்கும் வகையில் வேலி அமைக்க வேண்டும். மாற்றுப்பாதை மோசமாக உள்ளதால், இரவு நேரத்தில் மக்கள் நிலை தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, இந்த மாற்றுப் பாதையை அடைக்க வேண்டும். நுழைவாயிலை முறையாக பராமரிப்பு செய்ய வேண்டும்.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை