உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மழையால் நெட் ஒர்க் பிரச்னை; ரேஷன் வழங்குவது பாதிப்பு

மழையால் நெட் ஒர்க் பிரச்னை; ரேஷன் வழங்குவது பாதிப்பு

கோவை; தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் நெட்ஒர்க் பாதிக்கப்பட்டு, ரேஷன் கடைகளில் பி.ஓ.எஸ்., மெஷின் வேலை செய்யவில்லை.கோவை மாவட்டத்தில், 1450 க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு பி.ஓ.எஸ்., மெஷின் வாயிலாக பெயர் பதிவு செய்து கார்டுதாரர்களுக்கு அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் நெட்ஒர்க் பாதிக்கப்பட்டு, கோவையில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பி.ஓ.எஸ்., மெஷின் வேலை செய்யவில்லை. இதனால் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, பொருட்கள் வழங்க முடியவில்லை. ரேஷன் கடைக்கு பொருட்கள் வாங்க வந்தவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை