உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தொண்டாமுத்துாரில் தட்டியெடுத்த மழை

 தொண்டாமுத்துாரில் தட்டியெடுத்த மழை

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், இடியுடன் கூடிய கனமழை பெய்தது. தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், நேற்று காலை, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 10:00 மணிக்கு பின், வழக்கம்போல, வெயில் வாட்டியது. இந்நிலையில், மாலை 3:45 மணிக்கு, திடீரென பலத்த காற்று வீசியது. தொண்டாமுத்தூர், நரசீபுரம், பூண்டி, சாடிவயல், ஆலாந்துறை, பேரூர் உள்ளிட்ட பகுதிகளில், 30 நிமிடங்கள் இடைவிடாது கனமழை பெய்தது. பேரூர், தீத்திபாளையம், மாதம்பட்டி, நரசீபுரம் உள்ளிட்ட பகுதிகளில், ஆலங்கட்டி மழை பெய்தது. பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். பலத்த காற்று வீசியதால், சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !