ராமகிருஷ்ணா விளையாட்டு விழா; கணினி அறிவியல் துறை சாம்பியன்
கோவை; ராமகிருஷ்ணா மகளிர் கல்லுாரி விளையாட்டு போட்டிகளில் கணினி அறிவியல் துறை ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டியது.ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லுாரியின், 34வது விளையாட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. 100 மீ., 200 மீ., ஓட்டம், கராத்தே, சிலம்பம், ஏரோபிக்ஸ் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.சிறப்பு விருந்தினராக மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் பேசுகையில்,''தற்போதைய சூழலில் உடல் நலமும், மனநலமும் நன்றாக இருந்தால்தான் வாழ்வில் வெற்றிபெற முடியும். மாணவியர் கல்வியோடு, உடல்நலத்தையும் பாதுகாப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பெண்கள் பொருளாதார சுதந்திரம் பெற்றவர்களாக இருக்க வேண்டியது அவசியமானது. அதை குறிக்கோளாக கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும்,'' என்றார்.பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கணினி அறிவியல் துறை வென்றது. எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர், கல்லுாரி முதல்வர் சித்ரா ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.