உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  குடியரசு தின அணி வகுப்புக்கு தேர்வான ராமகிருஷ்ணா மாணவர்

 குடியரசு தின அணி வகுப்புக்கு தேர்வான ராமகிருஷ்ணா மாணவர்

கோவை: நாட்டின் 77வது குடியரசு தினவிழா, வரும் ஜன., 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தலைநகர் டெல்லியில் பிரம்மாண்ட அணிவகுப்பில் பங்கேற்க, நவஇந்தியா, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் இளநிலை பி.காம். அக்கவுன்டிங் மற்றும் பைனான்ஸ் துறை இரண்டாமாண்டு மாணவர் தர்ஷன், தேர்வு செய்யப்பட்டுள்ளார். மாணவர் தர்ஷனை, எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர், கல்லுாரி முதல்வர் சிவக்குமார், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் பிரகதீஸ்வரன் பாராட்டினர். டெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பு நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி மாணவர்கள் தொடர்ந்து, 12வது முறையாக பங்கேற்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ