கோவை நுாறடி ரோட்டிலும் ராம்ராஜ் ஷோரூம் துவக்கம்
கோவை; காந்திபுரம் நுாறடி சாலையில், ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் நேற்று திறக்கப்பட்டது. பாரதிய வித்யா பவன் கோவை தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் திறந்து வைத்து, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். கோவையை சேர்ந்த எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி நிறுவன தலைவர் ஸ்ரீனிவாசன் பெற்றுக் கொண்டார். ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன், நிர்வாக இயக்குனர் அருண் ஈஸ்வர், இணை நிர்வாக இயக்குனர் அஸ்வின், ஹீரோ பேஷன் நிர்வாக இயக்குனர் சுந்தரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர். ஷோரூமில், வெள்ளை வேட்டிகள், சட்டைகள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கான பண்டிகை கால ஆடைகள் மற்றும் பல்வேறு புதிய ஆடை ரகங்கள் ஏராளமாக உள்ளன. ராம்ராஜ் காட்டன் நிறுவனர் நாகராஜன் பேசுகையில், வாடிக்கையாளர்களின் ஊக்கமே, எங்கள் பயணத்தின் அடித்தளம். பாரம்பரியத்தை போற்றும் வேட்டி, சட்டைகளை பல்வேறு வண்ணங்களில், வழங்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்,'' என்றார். தொடர்ந்து, சுயம்வரா கிராண்ட், பரிணயம் கிராண்ட், சங்கல்பம் கிராண்ட் மற்றும் லக்ஸ் செட் ஆகிய கிராண்ட் கலெக்சனையும் அறிமுகம் செய்து வைத்தார். இந்த வேட்டி, சட்டைகள், ஸ்கை ப்ளூ, கோல்ட், மோஸ் கிரீன் மற்றும் ரோஸ் கோல்ட் போன்ற வண்ணங்களில் கிடைக்கின்றன.