உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மானியம் உள்ளடக்கி ரேஷன் குறுஞ்செய்தி

அரசு மானியம் உள்ளடக்கி ரேஷன் குறுஞ்செய்தி

திருப்பூர்: ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கியதும், அவற்றின் விலை, அரசு வழங்கும் மானியம் உள்ளிட்ட முழு விவரங்களும் கார்டுதாரர்களின் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் நடைமுறை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இதுவரை பொருட்கள் வாங்கியதற்கான பில் எண், பொருட்களின் அளவு, மொத்தத் தொகை உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு வந்தன. தற்போது கார்டுதாரரின் பெயர், கார்டின் வகை, ரேஷன் கடை எண், பொருள் வாங்கிய தேதி, நேரம், அரசு நிர்ணயித்த விலை, கார்டுதாரருக்கு வழங்கப்படும் விலை, மொத்தத் தொகை, அரசு வழங்கும் மானியம் ஆகிய விவரங்களும் அனுப்பப் படுகின்றன. ஒரு கார்டுக்கு மானியம் ஒரு லிட்டர் சமையல் எண்ணெயின் அரசு விலை ரூ.148, கார்டுதாரருக்கு ரூ.25-க்கு வழங்கப்படுகிறது. துவரம் பருப்பு அரசு விலை ரூ.77.89, விற்பனை விலை ரூ.30. இரண்டு கிலோ சர்க்கரையின் அரசு விலை ரூ.52.48, கார்டுதாரருக்கு ரூ.50-க்கு வழங்கப் படுகிறது. புழுங்கல் அரிசி கிலோ ரூ.8.30, கோதுமை கிலோ ரூ.27.74 என்ற அரசு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இவை இலவசமாக வழங்கப் படுகின்றன. ஒரு கார்டுக்கு மாநில அரசு ரூ.489.05 மானியம் வழங்குகிறது. 24 கிலோ பொருட்களுக்கு கார்டுதாரர் செலுத்தும் தொகை ரூ.105 என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருட்களின் விலை, அரசு வழங்கும் மானியம், பொருட்கள் வாங்கிய கடை உள்ளிட்ட முழு விவரங்களும் குறுஞ்செய்தியாக வருவது பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி