ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
அன்னுார்; அன்னுார் அருகே சாலையூர் குரும்பபாளையத்தில் மொபட்டில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வந்தது. இதை கண்காணித்த கிராம மக்கள் நேற்று காலை அரிசியுடன் மொபட்டில் வந்த நபரை பிடித்தனர். விசாரணையில் அவர் அந்த பகுதியில் வீடுகளில் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து அவரையும், அவரது மொபட் மற்றும் 90 கிலோ அரிசியையும் பிடித்து வைத்தனர். தகவலறிந்த அன்னுார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரேஷன் அரிசியையும், மொபட்டையும், சம்பந்தப்பட்ட நபரையும், கிராம மக்கள் போலீசில் ஒப்படைத்தனர்.