மேலும் செய்திகள்
'ரா மேட் இண்டியா-25' கண்காட்சி துவங்கியது
12-Sep-2025
கோவை; கொடிசியாவில் நடந்து வரும் 'ரா மேட் 2025' மூலப் பொருள் கண்காட்சியின் 2ம் நாளான நேற்று, எம்.எஸ்.எம்.இ., தொழில் துறையினர் ஆர்வமாக பங்கேற்றனர். தொழில்துறையினருக்கான பல்வேறு மூலப்பொருள் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்களை ஒரே இடத்தில் காட்சிப்படுத்தும் 'ரா மேட்' கண்காட்சியில் 76 நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. மூலப்பொருட்களை நேரடியாக உற்பத்தியாளரிடம் இருந்து, தங்களுக்கேற்ற தரம், விலையில் பெற முடியும் என்பதால், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் நேற்று ஆர்வமாக பங்கேற்றனர்.இரும்பு, பவுண்டரிகளுக்கான மூலப்பொருட்கள், பாலி கார்பனேட், பாலி யூரித்தின், பாலி எலாஸ்டமர் போன்ற பிளாஸ்டிக் மூலப்பொருட்கள், ஆட்டோமொபைல் என ஒரே கூரையின் கீழ் அனைத்து மூலப்பொருட்களும் இடம்பெற்றிருந்தன. பேக்கேஜிங் துறையில், மர பெட்டிகள், அட்டை பெட்டிகள், காயர் பொருளால் உருவாக்கப்பட்ட அட்டைகள், தொழிற்சாலைகளில் பொருட்களைக் கையாள்வதற்கான இயந்திரங்கள் என ஒரு தொழிற்சாலைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும், ஸ்டால்களில் இடம்பெற்றுள்ளன. கண்காட்சி இன்று நிறைவடைகிறது.
12-Sep-2025