உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரியில் 30 நிமிடங்களில் 300 ரக டீ தயாரித்து சாதனை

கல்லுாரியில் 30 நிமிடங்களில் 300 ரக டீ தயாரித்து சாதனை

கோவை; ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறை, குன்னூர் தேயிலை வாரியம் சார்பில், 'டீ கிராப்டிங் 2025' நிகழ்ச்சி நடந்தது.இதில், 8 கல்லுாரிகளைச் சேர்ந்த உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறை மாணவர்கள், பொதுமக்கள் என 6 அணிகளாக இணைந்து 30 நிமிடங்களில், ஸ்பைஸ் டீ, மூலிகை, மஞ்சள், நெல்லி, துளசி, புதினா, தேன் டீ என வெவ்வேறு சுவைகளில், 300 விதமான டீ தயாரித்து அசத்தினர். இம்முயற்சி, கலாம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது.சாதனை விழாவுக்கு, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார். குன்னுார் தேயிலை வாரிய நிர்வாக இயக்குநர் முத்துக்குமார் பேசுகையில், “டீயில் உள்ள கூட்டுக்கலவைகள் மருத்துவ குணம் கொண்டவை. கொரோனா காலத்தில், இந்தியாவில் உயிரிழப்புகள் குறைவாக இருந்தமைக்கான ஆய்வில், மஞ்சளும், டீயும் இந்தியர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்தது தெரியவந்தது. கலப்படமற்ற டீத்துாளை வாங்கி பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும்,” என்றார்.கல்லுாரி முதல்வர் சிவகுமார், தேயிலை வாரிய துணைத் தலைவர் ராஜேஷ்சந்தர், உறுப்பினர் மனோஜ்குமார், உணவு மற்றும் விடுதி மேலாண்மைத் துறைத் தலைவர் ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ