உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  சுற்றுலாபயணியரை வசீகரித்து வரும் ரெட் லீப் பூக்கள்

 சுற்றுலாபயணியரை வசீகரித்து வரும் ரெட் லீப் பூக்கள்

வால்பாறை: சாலையோரம் பூத்துக்குலுங்கும் சிவப்பு நிறப்பூக்களை, சுற்றுலாபயணயர் வெகுவாக கண்டு ரசிக்கின்றனர். வால்பாறையில் பருவமழைக்கு பின் வன வளம் மிகவும் பசுமையாக உள்ளது.சீதோஷ்ண நிலை மாற்றத்தால், வால்பாறை மலைப்பாதையில் பல்வேறு வகையான பூக்கள் பூத்துகுலுங்குகின்றன. குறிப்பாக வால்பாறை மலைப்பகுதியில் உள்ள ரோட்டில், சூரியகாந்தி பூக்கள், கார்த்திகை பூக்கள் பரவலாக பூத்துக்குலுங்குகின்றன. கண்களுக்கு குளிர்ச்சியூட்டும் இது போன்ற பூக்களை சுற்றுலாபயணியர் வெகுவாக கண்டு ரசிக்கின்றனர். இந்நிலையில், வால்பாறையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் ரோட்டில் (அய்யர்பாடி), சாலையோரம் சிவப்பு நிற பூக்கள்(ரெட்லீப்) பரவலாக பூத்துக்குலுங்குகின்றன. சுற்றுலாபயணியரை வசீகரிக்கும் இந்த பூக்களின் அருகில் நின்றபடி, சுற்றுலாபயணியர் படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ