உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மலைப்பாதையில் விபத்து தவிர்க்க ஒளிபிரதிபலிப்பு பலகை அமைப்பு

மலைப்பாதையில் விபத்து தவிர்க்க ஒளிபிரதிபலிப்பு பலகை அமைப்பு

வால்பாறை; நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் விபத்துகளை தவிர்க்க, ஒளிரும் ஸ்டிக்கர் பலகை அமைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.வால்பாறைக்கு சுற்றுலா பயணியர் வருகை அதிகமுள்ளது. இந்நிலையில், ஆழியாறில் இருந்து வால்பாறை வரை, நெடுஞ்சாலைத்துறை சார்பில், விபத்துகளை தடுக்க, 40 கொண்டைஊசி வளைவுகளிலும் குவிக்கண்ணாடி வைக்கப்பட்டுள்ளது.இதனால், சமீப காலமாக மலைப்பாதையில் விபத்து ஏற்படுவது வெகுவாக குறைந்துள்ளது. அதே போல் வளைவுகளில் ஒளிரும் ஸ்டிக்கருடன் கூடிய மஞ்சள் நிற தடுப்புக்கள் வைக்கபட்டுள்ளன.இதுதவிர, வனவிலங்குகள் மற்றும் இயற்கையை பாதுகாக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், கொண்டைஊசி வளைவுகளில், வனவிலங்குகள், பறவைகளின் படங்கள் கொண்ட போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், ஆழியாறிலிருந்து வால்பாறை வரையிலான நெடுஞ்சாலைத்துறை ரோட்டில் இரவு நேர விபத்துகளை தவிர்க்க, ஒளிரும் ஸ்டிக்கர் பலகை வைக்கும் பணி தீவிரமாக நடக்கிறது.இதுகுறித்து, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் தினேஷ்குமார், உதவி பொறியாளர் பிரதீப் ஆகியோர் கூறுகையில், 'சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறையில், விபத்துகளை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றன.இதன் ஒரு பகுதியாக, ஆழியாறிலிருந்து வால்பாறை, சோலையாறுடேம் வரையிலான ரோட்டில் ஒளிரும் பலகை மற்றும் ஏற்கனவே உள்ள உபகரணங்களை சுத்தம் செய்யும் பணி, வழிகாட்டி பலகையை மறைத்துள்ள செடிகளை அகற்றும் பணியும் நடக்கிறது. மலைப்பாதையில் விபத்துகளை தவிர்க்க, கொண்டைஊசி வளைவுகளில் வைக்கப்பட்டுள்ள குவிகண்ணாடியை சுற்றுலா பயணியர் சேதப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ