மேலும் செய்திகள்
கலைத் திருவிழா போட்டி
23-Oct-2024
வால்பாறை: வட்டார அளவில் நடந்த கலைத்திருவிழாவில், மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.ஒருங்கிணைந்த கல்வி வளர்ச்சி திட்டத்தின் கீழ், வால்பாறையில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கான, வட்டார அளவிலான கலைத்திருவிழா நடக்கிறது.அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கலைத்திருவிழா போட்டியை, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜாராம் துவக்கி வைத்தார்.வட்டார அளவில் நடைபெற்ற கலைத்திருவிழாவில், நடனம், பாட்டு, ஓவியம், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.வால்பாறையில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை ஆசிரியர் பயிற்றுநர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
23-Oct-2024