உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம்

கோவில்பாளையம்; வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நான்கு பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சர்க்கார் சாமக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) தனலட்சுமி, கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார். அங்கு பணிபுரிந்த ரேவதி வளர்ச்சி பிரிவு மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.பெரிநாயக்கன்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ராமமூர்த்தி, சர்க்கார் சாமக்குளம் ஒன்றிய அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.பொள்ளாச்சி தெற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜென்கின்ஸ், பெரியநாயக்கன் பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.'பணி மாறுதல் தொடர்பாக எந்தவித கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. பணி மாறுதலை தவிர்க்க விடுப்பில் செல்லக்கூடாது. உடனடியாக பணி ஏற்பு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்' என கலெக்டர் உத்தரவில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி