உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளை முதல் சீரான குடிநீர் விநியோகம்; அதிகாரிகள் தகவல்

நாளை முதல் சீரான குடிநீர் விநியோகம்; அதிகாரிகள் தகவல்

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் நகரில், நாளை முதல் குடிநீர் வினியோகம் சீராக நடைபெறும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. பவானி ஆற்றில் இருந்து நகராட்சிக்கு, மூன்று குடிநீர் திட்டங்களில் இருந்து, தினமும் ஒரு கோடியே, 20 லட்சம் லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. அதை சாமண்ணா நீரேற்று நிலையத்தில் உள்ள, சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தம் செய்யப்படுகிறது.சாமண்ணா தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள, மூன்று குடிநீர் திட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. அதனால், 18ம் தேதியிலிருந்து, 20ம் தேதி வரை, மூன்று நாட்களுக்கு மேட்டுப்பாளையம் நகரில் குடிநீர் வினியோகம் இருக்காது என, நகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. தற்போது சுத்திகரிப்பு நிலையத்தில் பணிகள் நடைபெறுகின்றன. இது குறித்து நகராட்சி கமிஷனர் அமுதா, பொறியாளர் ராமசாமி ஆகியோர் கூறியதாவது: சுத்திகரிப்பு நிலையத்தில் சேரும், சகதியும் அதிகளவில் படிந்துள்ளது. அவற்றை அகற்றும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. அதேபோன்று நகரில் குடிநீர் குழாயில் உள்ள உடைப்புகள் மற்றும் தண்ணீர் கசியும் இடங்களில், குழாய்கள் மாற்றும் பணிகளும், உடைப்புகள் சரி செய்யும் பணிகளும் தீவிரமாக நடைபெறுகின்றன. அனைத்து பணிகளும் நாளை (இன்று) முடிக்கப்படும். நாளை மறுதினம் (நாளை) பொதுமக்களுக்கு வழக்கம் போல், குடிநீர் சீரான முறையில் வழங்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை