மேலும் செய்திகள்
பயணியர் நிழற்கூரையில் போஸ்டரால் அலங்கோலம்
04-Dec-2024
வால்பாறை; வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் உள்ள பயணியர் நிழற்கூரையை அரசியல் கட்சியினர் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த விளம்பர போஸ்டர்கள் மற்றும் பேனர்கள், 'தினமலர்' நாளிதழ் செய்து எதிரொலியாக அகற்றப்பட்டன.வால்பாறை நகர் மற்றும் பல்வேறு எஸ்டேட்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட பயணியர் நிழற்கூரைகள் உள்ளன. பெரும்பாலான பயணியர் நிழற்கூரை இடிந்து விழும் நிலையில் உள்ளன.இந்நிலையில், வால்பாறை காந்திசிலை பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூரையை சுற்றிலும் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதனால், பயணியர் நிழற்கூரை அலங்கோலமாக காட்சியளிக்கிறது.இது குறித்து, கடந்த, 4ம் தேதி 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து நகராட்சி கமிஷனர் ரகுராமன் உத்தரவின் பேரில் துாய்மை பணியாளர்கள் நிழற்கூரையில் விதிமுறையை மீறி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை நேற்று அகற்றினர்.இதே போன்று, காந்திசிலையை மறைத்து விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது என எச்சரித்தும், தடையை மீறி அரசியல் கட்சியினர் விளம்பர பேனர்கள் வைத்தனர். காந்திசிலையை மறைத்து வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்களை போலீசார் உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி, 'தினமலர்' நாளிதழில் நேற்று படத்துடன், செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து, வால்பாறை இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் உத்தரவின் பேரில், போலீசார் முன்னிலையில் கட்சி பேனர்கள் நேற்று காலை அகற்றப்பட்டன. 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, கட்சி பேனர்கள், போஸ்டர்கள் அகற்றப்பட்டதால், பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
04-Dec-2024