மேலும் செய்திகள்
பேனர் வைத்த போலீசார் பொதுமக்கள் அதிருப்தி
27-Oct-2024
தவெக பேனர்களை அகற்ற போலீஸ் அதிரடி உத்தரவு!
25-Oct-2024 | 1
வால்பாறை; தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், வால்பாறையில் காந்தி சிலையை மறைத்து வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள் அகற்றப்பட்டன.வால்பாறை பஸ் ஸ்டாண்டின் மத்தியில் காந்தி சிலை அமைந்துள்ளது. சமீப காலமாக அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சியின் போது, பல்வேறு அரசியல் கட்சியினர் போட்டி போட்டு கொண்டு, காந்தி சிலை வளாகத்தை சுற்றிலும் விளம்பர பேனர்கள் வைக்கின்றனர்.காந்தி சிலையை மறைத்து விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது என, நகராட்சி சார்பில் எச்சரித்தும், மீண்டும் அதே இடத்தில் கட்சியினர் பேனர் வைக்கின்றனர். அங்கு வைக்கப்படும் பேனர்கள், பல நாட்களாகியும் அகற்றப்படாமல் இருந்தது. இதனால், பொதுமக்களுக்கும், பொக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது.இதுபற்றி, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து, காந்தி சிலையை வளாகத்தை சுற்றிலும் அரசியல்கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை போலீசார் அகற்றினர். இதனால், பஸ் ஸ்டாண்ட் வந்து செல்லும் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
27-Oct-2024
25-Oct-2024 | 1