உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குடியரசு தின விளையாட்டு: கோவை மாணவியர் அபாரம்

குடியரசு தின விளையாட்டு: கோவை மாணவியர் அபாரம்

கோவை: குடியரசு தின மாநில அளவிலான விளையாட்டு போட்டியில், கோவை மாணவ, மாணவியர் திறமையை வெளிப்படுத்தினர். தஞ்சாவூர் மாவட்ட கல்வித்துறையின் ஒருங்கிணைப்பில், மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டிகள், அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் நடந்தது. மாணவியருக்கான 17 வயதுக்கு உட்பட்ட மும்முறை தாண்டுதல் போட்டியில், தக் ஷின்யா மூன்றாவது இடம், 19 வயதுக்கு உட்பட்ட குண்டு எறிதல் போட்டியில், சீனி நிதிலா முதலிடம், ரிச்சிவர்ஷா நான்காவது இடம் பெற்றனர். நீளம் தாண்டுதல் போட்டியில், பிரத்யுக்ஷா மூன்றாமிடம், 14 வயதுக்கு உட்பட்ட 100 மீ., ஓட்டத்தில் ஜோதிகா மூன்றாவது இடம், 19 வயதுக்கு உட்பட்ட 400 மீ., ஓட்டத்தில் மோனிகா நான்காவது இடம் பெற்றனர். போட்டிகளில் முதல் இரண்டு இடங்கள் பிடித்தவர்கள், இந்திய பள்ளிகள் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ