உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  விடுபட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

 விடுபட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

மேட்டுப்பாளையம்: 'சூறாவளி காற்றால் வாழைகள் சேதமடைந்த நிலையில், விடுபட்ட விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்' என, பவானி ஆற்றுநீர்ப் பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. சங்கத்தலைவர் துரைசாமி அறிக்கை: மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை பகுதிகளில் வீசிய சூறாவளியால், ஏராளமான விவசாயிகளின் பல லட்சம் வாழைகள் சேதமடைந்தன. 246 விவசாயிகளுக்கு, 23 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தொகை வழங்க, தமிழக அரசு நிதி ஒதுக்கியது. அதிகாரிகள் கணக்கெடுப்பில், பாதிக்கப்பட்ட பல விவசாயிகள் விடுபட்டுள்ளனர். இவர்களுக்கும், இழப்பீடு தொகை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சூறாவளி காற்றால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என சங்கம் சார்பில், 2025 மே மாதம், அரசு, தோட்டக்கலைத் துறை, மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தோம். அதையேற்று, இழப்பீடு தொகை வழங்கிய அரசுக்கு நன்றி. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி